மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் ஆபத்தானநிலையில் சுவிட்ச் பாக்ஸ்
16-Oct-2024
பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றாற்போல், சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும், பல பகுதிகளில், சாலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, குடிநீர் குழாய் உடைப்பு, கசிவு ஏற்படும் போது, தார் சாலை தோண்டப்பட்டால், முறையாக சீரமைப்பது கிடையாது.இதனால், பல பகுதிகளில், சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது. சில பகுதிகளில், சாலையில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியு-மாக காட்சியளிப்பதால், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் மக்கள் பாதிக்கின்றனர்.பல பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பதையும், கார் ெஷட் அமைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பேரூராட்சி அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வு நடத்தி விதிமீறலைக் கண்டறிந்து தடுப்பதுடன், சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16-Oct-2024