உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உத்தண்டராயர் கோவில் கும்பாபிஷேகம்

உத்தண்டராயர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னுார் : அச்சம்பாளையம், உத்தண்டராயர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடக்கிறது. பழமையான உத்தண்டராயர் கோவிலில், சித்தி விநாயகர், குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் புதிதாக நல்லம்மன், கன்னிமார், உத்தண்ட ராயர் சிலைகள் நிறுவப்பட்டு, விமான கோபுரத்திற்கு வர்ணம் தீட்டி, சிற்ப சாஸ்திரப்படி, திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா நாளை (6ம் தேதி) காலை 10:00 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமி பிரதிஷ்டை செய்தல், கோபுரம் கலசம் நிறுவுதல் நடக்கிறது.மாலையில் பாலகர் பூஜை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை அஸ்திர யாகமும், மதியம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தம் மற்றும் முளைப்பாரி மங்கள வாத்தியத்துடன் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு காப்பு கட்டுதலும், முதற்கால வேள்வியும் நடக்கிறது.வரும் 8ம் தேதி காலை 10:15 மணிக்கு, விமான கோபுரம், கலசங்கள் மற்றும் சித்தி விநாயகர், குழந்தை வேலாயுதசாமி, நல்லம்மன், மற்றும் உத்தண்டராயருக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அலங்கார பூஜை நடக்கிறது. திருக்கயிலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.அன்னுார், செப். 5-- அன்னுாரில், கோவை சாலையில், குமரன் நகரில், 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சலவையாளர் வீதியில் அடிப்படை வசதி இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவில்லை. கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. தெருவிளக்கு இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இங்கு அதிகமாக உள்ளது. இங்கு பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர்களுடன் காட்சி அளிக்கிறது.அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை