மேலும் செய்திகள்
உத்தண்டராயர் கோவில் கும்பாபிஷேகம்
05-Sep-2024
அன்னுார்: அச்சம்பாளையம் உத்தண்டராயர் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அச்சம்பாளையத்தில், பழமையான உத்தண்டராயர் கோவிலில், சித்தி விநாயகர், குழந்தை வேலாயுதசாமி, புதிதாக நல்லம்மன், கன்னிமார் மற்றும் உத்தண்டராயர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. விமான கோபுரத்திற்கு, வர்ணம் தீட்டி, சிற்ப சாஸ்திரப்படி திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. மதியம் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் கலசம் நிறுவப்பட்டது.நேற்று முன்தினம் பாலகர் பூஜையும், செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் மங்கள வாத்தியத்துடன், தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று காலை 10:15 மணிக்கு, விமான கோபுர கலசங்கள், சித்தி விநாயகர், குழந்தை வேலாயுதசாமி, நல்லம்மன் மற்றும் உத்தண்டராயருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்களாக திருக்கயிலாய வாத்தியம் வாசிக்கப்பட்டது. அன்னுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
05-Sep-2024