உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கு; அறிக்கை சமர்ப்பிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் அக்., 16ல் விசாரணை

வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கு; அறிக்கை சமர்ப்பிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் அக்., 16ல் விசாரணை

கோவை;வெள்ளலுார் குப்பை கிடங்கு தொடர்பான வழக்கில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கோவை மாநகராட்சி சார்பில், 98 பக்கத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு அக்., 16க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.நிலத்தடி நீர் பாழ்பட்டது; சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசடைந்தது. குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் ஆகியோர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பயங்கர தீ விபத்து

இச்சூழலில், கடந்த ஏப்., 6ம் தேதி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது; தொடர்ந்து நான்கு நாட்கள் தீப்பற்றி எரிந்ததால், சுற்றுப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயாம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்தது.பின், இவ்வழக்கை சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றியது. இவ்வழக்கு செப்., 3ல் (நேற்று) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.முன்னதாக, முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னை தொடர்பாக விவாதித்தனர். குப்பை அழிப்பு, மின்சாரம், உரம் தயாரிப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து, 98 பக்கத்துக்கு விரிவாக செயல் திட்ட அறிக்கை தயாரித்தனர். மாநகராட்சி கமிஷனர், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.மாநகராட்சி தரப்பில் நகர பொறியாளர் அன்பழகன், நகர் நல அலுவலர் (பொ) பூபதி, உதவி பொறியாளர்கள் ரவிக்கண்ணன், ஜீவராஜ் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகினர். வழக்கு விசாரணை அக்., 16ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பட்டியலிடப்பட்டது.

இதோ புள்ளி விபரம்!

வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகம் - 654 ஏக்கர்வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் - 54.15 ஏக்கர்ஆர்.ஏ.எப்., குடியிருப்பு - 57.60 ஏக்கர்நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 50.25 ஏக்கர்குப்பை கிடங்கில் மீதமிருப்பது - 492 ஏக்கர்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - 15.32 ஏக்கர்குப்பையில் உரம் தயாரிப்பு மையம் - 80 ஏக்கர்பயோமைனிங் மையம் - 35 ஏக்கர்உரம் தயாரிக்கும் மையம் - 15 ஏக்கர்இறைச்சி கழிவு கையாளும் மையம் - 0.85 ஏக்கர்பயோமைனிங் பேஸ் - 1 நிலம் மீட்பு - 50 ஏக்கர்பயோமைனிங் பேஸ் - 2 நிலம் - 60 ஏக்கர்லகூன் - 15 ஏக்கர்புதிய குப்பை கொட்டுவது - 8 ஏக்கர்குப்பை கொட்டாமல் உள்ள நிலம் - 212.30 ஏக்கர்

கமிஷனர் கூறியிருப்பது என்ன?

n கோவையில், 65 இடங்களில் குப்பை மேலாண்மை மையம் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டு இருந்தது; வார்டு அளவில் வெவ்வேறு இடங்களில் 50 மையங்கள் கட்டப்பட்டன. 2-5 டன் குப்பை கையாளும் திறனுள்ள, 36 மைக்ரோ கம்போசிங் சென்டர் (எம்.சி.சி.,) அமைக்கப்பட்டதில், 23 செயல்படுகின்றன.n 8 இடங்களில் எம்.ஆர்.எப்., மையங்கள், ஒரு மையத்தில் இ-வேஸ்ட் கையாளப்படுகிறது. 6 இடங்களில் 'பயோ காஸ்' சென்டர் செயல்பட்டது; பராமரிப்பு காரணமாக தற்போது செயல்படவில்லை. ஒரு மையம், சார்ஜிங் சென்டராக மாற்றப்பட்டிருக்கிறது.n இவ்வாறு தினமும் சேகரிக்கப்படும் குப்பை, அந்தப் பகுதியில் அழிக்கப்படுவதால், திறந்தவெளியில் கொட்டுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. வெள்ளலுார் குப்பை கிடங்கை நுணுக்கமாக தினமும் கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் கோர்ட் வழக்கால், சில இடங்களில் எம்.சி.சி., செயல்படவில்லை.n மொத்தம், 68.25 ஏக்கரில் தேங்கியிருந்த பழைய குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் கையாண்டதில், 50 ஏக்கர் மீட்கப்பட்டிருக்கிறது. 2,100 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. இன்னும், 58.54 ஏக்கரில் ஏழு லட்சத்து, 43 ஆயிரத்து, 247 மெட்ரிக் டன் குப்பை தேங்கியுள்ளது. இவற்றை அழிக்க, 'பயோமைனிங்' பேஸ்-2 திட்டம் செயல்படுத்த இருக்கிறோம்.n ஜனவரியில் இருந்து ஆக., வரை எடுத்த நடவடிக்கையால், வெள்ளலுாரில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவது, 81 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக சேகரிக்கப்படும் குப்பை, 5-8 ஏக்கர் பரப்புக்குள் கொட்டப்படுகிறது.n தற்போது தனியார் நிறுவனம் மூலம் குப்பை மேலாண்மை செய்யப்படுகிறது; 100 சதவீதம் தரம் பிரித்து சேகரிக்க முயற்சித்து வருகிறோம். வீதியில் குப்பை கொட்டும் பழக்கத்தை, மக்களிடம் இருந்து மாற்றுவதற்காக, குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.n மாடித்தோட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில், வீடுகளிலேயே மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் திட்டத்தில், பைலட் முயற்சியாக, 100 வீடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.n வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் வாகனங்களில் குப்பை சேகரிப்பது, ஜி.பி.எஸ்., ரூட் சார்ட் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 36 எம்.சி.சி., மையங்கள் கட்டியதில், 23 இடங்களில் செயல்படுகிறது; 13 இடங்களில் மட்டும் செயல்படவில்லை.n இதில், பொதுமக்கள் எதிர்ப்பால் ஆறு இடங்கள், பசுமை தீர்ப்பாய வழக்கால் ஒரு இடத்தில் செயல்படவில்லை. மீதமுள்ள ஆறு மையங்கள், ஒரு மாதத்துக்குள் செயல்பட துவங்கும்; 30 -45 டன் குப்பை தினமும் கையாள நடவடிக்கை எடுக்கப்படும்; 30 நாட்களுக்குள் இந்த இலக்கை எட்ட முடியும்.n வெள்ளலுார் கிடங்கில் செயல்படும் ஒரு நிறுவனம், 700 டன் குப்பை கையாள்கிறது; 800 டன் கையாள வேண்டும் என்பதால், மீதமுள்ள, 65 டன் குப்பையை அந்நிறுவனத்திடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.n ஸ்வட்ச் பாரத் 2.0 திட்டத்தில் ரூ.27 கோடியில் புதிதாக மூன்று இடங்களில் குப்பை மாற்று மையங்கள் கட்டப்பட உள்ளன. இவை பயன்பாட்டுக்கு வரும்போது, திறந்தவெளியில் குப்பை கொட்டுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்; இத்திட்டம், 15 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.n ரூ.69.20 கோடியில் 'பயோ காஸ்' பிளான்ட் அமைக்கப்படும். 'பிபிபி' முறையில் டெண்டர் கோரப்பட்டு, மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது; 24 மாதங்களில் முடிக்கப்படும்.n மதுரை, கோவை, திருப்பூரில் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை