உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு திட்ட ஊழியர்களை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்

அத்திக்கடவு திட்ட ஊழியர்களை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்

அன்னுார்; புதுப்பாளையம் குளத்தில் பராமரிப்பு பணி செய்ய வந்த ஊழியர்களை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். பசூர் ஊராட்சி, புதுப்பாளையத்தில், 20 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. இக் குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் இந்த குளத்தில் உள்ள குழாய் பழுது நீக்க அத்திக்கடவு திட்ட ஊழியர்கள் வந்தனர்.அப்போது கிராம மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்து பேசுகையில், 'பெரிய குளத்திற்கு வெறும் ஒன்றேகால் இன்ச் அளவு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இது வீட்டுக்கு பதிக்கப்படும் குழாயாகும். இந்த குழாயில் நீர் வந்தால் எத்தனை மாதங்கள் ஆனாலும் குளம் நிரம்பாது.மேலும் அம்மா செட்டி பதுார், தொக்குப்பாளையம் குளங்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட இதுவரை வரவில்லை. புதுப்பாளையம் குளத்திற்கு பதிக்கப்பட்ட குழாய் அளவை பெரிது செய்து பெரிய குழாய் பதிக்க வந்தால் மட்டுமே அனுமதிப்போம். சிறிய குழாயை பழுது பார்க்க அனுமதிக்க மாட்டோம்,' என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.கிராம மக்கள் கூறுகையில், 'குன்னததுாராம்பாளையத்தில் உள்ள ஆறாவது நீரேற்று நிலைய அலுவலகத்தில் பொறியாளர்களை சந்தித்து உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள்,' என ஊழியர்கள் கூறினர்.இதன்படி நேற்றுமுன்தினம் நீரேற்று நிலைய அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால் அதிகாரிகள் ஒருவர் கூட இல்லை. 50 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினோம். அரசு விரைவில் அனைத்து குளங்களுக்கும் நீர் விட வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ