வாலிபால் போட்டிஸ்ரீஈஸ்வர் அணி சாம்பியன்
கோவை, ;தஞ்சை மாவட்டத்தில் நடந்த, மாநில அளவிலான வாலிபால் போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி அணி, சாம்பியன்ஷிப் வென்றது.தஞ்சை மாவட்டம், சாஸ்திரா பல்கலையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி கடந்த, 21 முதல், 23ம் தேதி வரை நடந்தது. இதில், 18 அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலிறுதி போட்டியில், கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் தஞ்சை, திருக்குவளை அண்ணா பல்கலை அணியை வீழ்த்தியது.அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்வர் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், திருச்சி தேசிய கல்லுாரி அணியை வென்றது.இறுதிப் போட்டியில், சாஸ்திரா பல்கலை அணியை, 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.வெற்றி பெற்ற வீரர்களை கல்லுாரி சேர்மன் மோகன்ராம், இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா உள்ளிட்டோர் பாராட்டினர்.