உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியல் பணி துவங்கியது

வாக்காளர் பட்டியல் பணி துவங்கியது

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில், வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.தமிழகத்தில், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை, அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதத்தில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கிணத்துக்கடவு வட்டாரத்தில், வாக்காளர் பட்டியல் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.இதில், 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களுக்கு, அந்தந்த ஓட்டுப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.வாக்களர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும். மற்றும் இரண்டு பதிவு உள்ள வாக்காளர் பெயர்களில் தவறானது நீக்கப்படும். மேலும், கிராமப்புற பகுதிகளில் வீடு தோறும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) வாசுதேவன் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை