உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடை பயிற்சியாளர்கள் கடும் அவதி

நடை பயிற்சியாளர்கள் கடும் அவதி

கோவை,: கோவை பாரதிபார்க்கில் பட்டுப்போன மரக்கிளைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இது நடைபயிற்சி மேற்கொள்வோர் தலையை பதம் பார்க்கும் என்று நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் தொங்கிய கிளைகளை அப்புறப்படுத்தினர். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் நடைபயிற்சி மேற்கொள்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மரக்கிளைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ