உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாங்கதான் பர்ஸ்ட் ரேங்க் எங்கள ரொம்ப பாராட்டுறாங்க

நாங்கதான் பர்ஸ்ட் ரேங்க் எங்கள ரொம்ப பாராட்டுறாங்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட, தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தி உள்ளன. இது, உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதை தெளிவாகக் காட்டுகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், கல்லுாரி மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றால், கல்வித்தரத்தில் தமிழகம், இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.டில்லியில் கடந்த மாதம் 13ம் தேதி, மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள செய்திகள், தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தி உள்ளன.தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட, 926 கல்லுாரிகளில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் 165. அடுத்த நிலைகளில் டில்லி 88, மஹாராஷ்டிரா 80, கர்நாடகா 78, உத்தர பிரதேசத்தில் 71 என உள்ளன. இது, உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதைக் காட்டுகிறது.காலை உணவு உட்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் பயனாக, அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவ - மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித்தரத்தில், இந்தியாவில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
செப் 11, 2024 18:21

என்ன செய்வது? வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே இருபது முப்பது மார்க் வாங்கி ஃபெயில் ஆனால் ஐம்பது சதவீதம் வாங்கிய மாணவன் தான் முதல் ரேங்க் வாங்குவான்! அதற்காக அவனை பாராட்டாமல் இருக்க முடியுமா?


ஆரூர் ரங்
செப் 11, 2024 15:21

ஆசிரியர் NET தகுதித் தேர்வில் ஒரு சதவீத அரசு ஆசிரியர்களே தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால். கல்வித் தரம் எப்படியிருக்கும்?


ஆரூர் ரங்
செப் 11, 2024 10:48

உயர்கல்வி என்ற பெயரில் தரமற்ற கல்வி தேவையற்ற ஆணி. பிராக்டிகலாக சீரோ. பெரும்பாலானவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர். பிழையின்றி எந்த மொழியிலும் பேசவோ எழுதவோ தெரியாது. இரண்டு இலக்க கணக்கைப் போடக்கூட கால்குலேட்டர் கேட்கிறார்கள். உடலால் உழைக்கும் எண்ணமே போய்விட்டது.


Sampath Kumar
செப் 11, 2024 09:51

உண்மையை வெகு காலம் ரசிக்க உடையது அது aarirulai kilithu yaelum suriyan pola ஏழும்


Dharmavaan
செப் 11, 2024 09:39

முதலாக இருக்க உனக்கு முன் இருந்தவர்கள் காரணம் நீயில்லை


VENKATASUBRAMANIAN
செப் 11, 2024 08:35

காமராஜர் போட்ட அடித்தளத்தில் இதெல்லாம் நடக்கிறது. கழகங்கள் எதையுமே செய்யாமல் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இதுதான் திராவிட மாடல்


sridhar
செப் 11, 2024 08:28

இந்த மத்திய அரசுக்கு வேற வேலை கிடையாதா , யார் கேட்டாங்க இந்த ஆராய்ச்சியை .


Svs Yaadum oore
செப் 11, 2024 06:40

கடந்த ஐம்பது வருடங்களில் தி மு க எத்தனை வருடம் இங்கு ஆட்சி செய்தது?? ...அடுத்தவன் எதை செய்தாலும் அதற்கெல்லாம் வெட்கமில்லாமல் விடியல் ஸ்டிக்கர் ஒட்டிக்கும் .....மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஈர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் செய்த அத்தனை விஷயங்களும் மொத்தமாக வலை தளங்களில் மறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது ....அரசு கோப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள் .. ..இதைக்கூட கேள்வி கேட்க அ தி மு க வுக்கு துப்பில்லை ..ஆனால் அண்ணமாலை பேசி விட்டார் என்று டயர்கள் பொங்கி பாயும் ....


Kasimani Baskaran
செப் 11, 2024 05:22

தீம்க்கா ஆட்சிக்கு வந்தவுடன் காலை உணவு கொடுத்தார்கள் - உடனே தமிழகத்தின் கல்வித்தரத்தை காப்பியடிக்க கெஜ்ரிவால் கூட டெல்லியில் இருந்து வந்தார். கனடா கூட அந்தத்திட்டத்தை காப்பி அடித்து உலகில் நம்பர் ஒன்று ஆகிவிடும் என்று ஜஸ்டின் ட்ருடோவும் பைடனும் பேசிக்கொண்டார்கள்.


சமீபத்திய செய்தி