கோவை கொடிசியாவில் நடக்கும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியின், 'பி' அரங்கில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகள் பிரியர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், ரெட் சிலி ஸ்பாட் சேவரன், லாஸ்டர், ஜுவல், பிளாட்டினம் ஏஞ்சல், பிளவர்ஹார்ன் உள்ளிட்ட அரிய வகை வண்ண மீன்களுடன், இறக்குமதி செய்யப்பட்ட கப்பீஸ் என, 2க்கும் மேற்பட்ட மீன் வகைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.இங்கு, 10 ரூபாய் முதல் வளர்ப்பு மீன் மற்றும் அதுசார்ந்த அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியும். 100 ரூபாய்க்கு மீன் உணவு, சிறிய மீன் தொட்டி, இரு மீன்கள் அடங்கிய கிட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரூ.6,000க்கும் மீன் உள்ளது. பெட்ரூமில் வைக்க சிறிய மீன் தொட்டி முதல் வரவேற்பறையில் வைக்கும் பெரிய தொட்டிகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வண்ண மீன் மட்டுமன்றி, மீன் சார்ந்த எல்லாவித பொருட்களும் இங்கு கிடைக்கும்.உங்கள் குட்டீஸ்களுக்கு மீன் தொட்டி வாங்கிப் பரிசளியுங்கள், வீடே குதூகலத்தில் நிறைந்துவிடும். மீன் வளர்ப்பு மன அழுத்தத்தை விடுவித்து, மிகப்பெரிய ரிலாக்ஸைத் தரும் என்பதால், குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பெரியவர்களுக்கும் இந்த அரங்கம் மனநிறைவைத்தரும். பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியறை!
கண்காட்சிக்கு வரும், பாலூட்டும் தாய்மார்களுக்கான தேவையையும் அக்கறையோடு கவனத்தில் கொண்டிருக்கிறது 'தினமலர்'. தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டுவதற்காகவே தனியாக ஓர் அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு அமர்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கண்காட்சிக்கு வருபவர்களின் அவசரகால மருத்துவத் தேவையைக் கருத்தில் கொண்டு, கண்காட்சி வளாகத்திலேயே ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.