கோவை;டி.என்.ஜி.ஆர்., பள்ளியில் நடந்த மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, வெற்றிகளை குவித்தனர். தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு பள்ளியின் விளையாட்டுக்குழு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 29ம் ஆண்டு விளைாயாட்டுத் திருவிழா, வரதராஜபுரம் டி.என்.ஜி.ஆர்., பள்ளியில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு கோ கோ, கபடி, பூப்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் 14, 17 மற்றும் 19 ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. 87 பள்ளிகளில் இருந்து 3289 மாணவ - மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். பூப்பந்து
19 வயது மாணவர்கள் பிரிவில் ராமசாமி நாயுடு பள்ளி அணி முதலிடம், பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. மாணவியர் பிரிவில் ராமசாமி நாயுடு பள்ளி அணி முதலிடம், எகுவிடாஸ் குருகுல் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. கூடைப்பந்து
14 வயது மாணவர் பிரிவில் பெர்க்ஸ் முதலிடம், பி.எஸ்.ஜி., சர்வஜனா இரண்டாமிடம் பிடித்தன. 17 வயது மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் முதலிடம், பெர்க்ஸ் இரண்டாமிடம் பிடித்தன. வாலிபால்
14 வயது மாணவர்கள் பிரிவில் ஏ.பி.சி., முதலிடம், கீர்த்திமான் இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் அகர்வால் முதலிடம், ஏ.பி.சி., இரண்டாமிடம் பிடித்தன. மாணவியர் 14 வயது பிரவில் அகர்வால் பள்ளி முதலடம், ஏ.பி.சி., பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் இருகூர் அரசு பள்ளி முதலிடம், ஏ.பி.சி., பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. கோ கோ
மாணவர்கள் 14 மற்றும் 19 வயது பிரிவில் எம்.டி.என்., முதலிடம், டி.என்.ஜி.ஆர்., பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. மாணவியர் 14 வயது பிரிவில், எம்.டி.என்., பள்ளி முதலிடம், டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணி இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் டி.என்.ஜி.ஆர்., பள்ளி முதலிடம், எஸ்.என்.வி., பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.