உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் இருந்தால் கவலை எதுக்கு 

சோலார் இருந்தால் கவலை எதுக்கு 

கோடைக்காலம் முடிந்தவுடன் வந்த, கரண்டு பில் நமக்கு பெரிய 'ஷாக்' கொடுத்து இருக்கும். சோலார் பேனல் அமைத்துக்கொண்டால், கரண்டு பில் செலவினம் நமக்கு இருக்காது என்கிறார் ஹோப்ஸ் பகுதியில் அமைந்துள்ள, டாடா பவர் சோலார்- டிரிப்பில்ஸ் எனர்ஜி நிறுவன மேலாளர் நவீன்.இந்நிறுவனம் சார்பில், பெரிய தொழில்நிறுவனங்கள், கமர்சியல் கட்டடங்கள், குடியிருப்புகளுக்கு சோலார் பேனல் அமைத்து தரப்படுகிறது. தொழில்நிறுவனங்களில், 2 மெகாவாட் வரை பேனல்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தில் வீடுகளில்,சோலார் அமைக்க, சோலார் உற்பத்தி திறனை பொறுத்து 78 ஆயிரம் வரை மானியமும் தரப்படுகிறது. மேலும், வங்கிகளில், 7 சதவீதம் இ.எம்.ஐ., கடனுதவியும் அளிக்கப்படுவதால், அனைவரும் இதனை எளிதாக வீடுகளில் நிறுவிக்கொள்ள முடியும்.மேலாளர் நவீன் கூறுகையில், ''மாதந்தோறும், 3000, 4000 ரூபாய் கரண்டு பில் வரும் நபர்கள் இதை பயன்படுத்தினால், பணத்தை சேமிக்க இயலும். சோலார் பேனல் உற்பத்தி திறனுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், பிற உபகரணங்களுக்கு 10 ஆண்டுகள் வாரண்டியுடனும் அமைத்து தருகிறோம்,'' என்றார். ஆர்வமுள்ளவர்கள், 88703-75444 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை