உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வந்து வந்து போகுதம்மா... எண்ணம் எல்லாம் வண்ணம்மம்மா...

வந்து வந்து போகுதம்மா... எண்ணம் எல்லாம் வண்ணம்மம்மா...

மனிதர்களை அவ்வளவு சீக்கிரம் எடை போட்டு விடமுடியாது. யாருக்குள் எந்த திறமை ஒளிந்திருக்கும் என்று எளிதில் கணித்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை. இதில் பழங்குடியினருக்கு என்று தனி அடையாளம் இருக்கும். அவர்களின் கை வண்ணம் அலாதி.அவர்களின் கலைப் பொருட்கள் படைப்பு வாயிலாக வெளிக்கொணரும் ஒரு முயற்சி, பலரது வீடுகளில் அவர்களின் திறமை உயிர்பெற்று வருகிறது. இதை மேலும் பரவலாக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், அவர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகின்றன.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இவர்களின் படைப்புகளுக்காக ஒதுக்கப்படும் விற்பனையகங்கள், கோவையில் இரு இடங்களில் உள்ளன. அதில் ஒன்று, கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன வளாகத்தில் உள்ளன.நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர்களின் எம்ப்ராய்டரி, கோத்தரின மக்களின் மண் சிற்பங்கள், குறும்பர் இன மக்களின் பெயின்டிங், காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இன மக்கள் சேகரிக்கும் தேன்... இப்படி நிறைய.இவைகள் தவிர, ராஜஸ்தான், ம.பி., மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களும் வசீகரிக்கின்றன.புடவை, அணிகலன், கைப்பை என, பெண்கள் விரும்பும் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. இரவில், வீட்டில் இருக்கும் விளக்குகளை அணைத்து விட்டு, ராஜஸ்தான் மாநில விளக்கு ஒன்றை ஒளிர விட்டால் போதும்; இரவில் ஏற்றிய சிறு விளக்காய், துாக்கத்துக்கு துாபம் போடும்.மனம் வீசும் ஊதுபத்தி, மலைத்தேன், நெல்லிக்காய் மிட்டாய் என சகலமும் இங்கே, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இங்கிருக்கும் பழங்குடியினரின் பொருட்களை பார்க்கும் போது, அவர்களின் திறமைக்கு ஒரு ராயல் சல்யூட் கொடுக்கலாம்.இங்கிருக்கும் விற்பனையகம் காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படுகின்றன. சென்று பாருங்கள்... உங்களை வியக்க வைக்கும் அத்தனையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை