ஆதார் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருமா?
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் செயல்படாமல் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள், புதிதாக ஆதார் பதிவுக்கும், ஆதாரில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்டவைகளை திருத்தம் செய்ய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை பயன்படுத்தி வந்தனர்.ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாக ஆதார் சேவை மையம் செயல்படாமல் உள்ளது. இதனால், மக்கள் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் சேவையை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, விரைவில் ஆதார் சேவையை துவங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.