உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுக்கே பாய்ந்த நாயால் பெண் பலி

குறுக்கே பாய்ந்த நாயால் பெண் பலி

கோவை, : கோவை நீலிக் கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. இவர் தனது மனைவி வடிவு, 51 உடன் மொபட்டில், சென்று கொண்டிருந்தார். பங்கஜா மில் ரோடு அருகே, நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ரோட்டில் கவிழ்ந்தது. இதில் ராஜேந்திரன், வடிவு ஆகியோர் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த வடிவு, ராஜேந்திரன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி வடிவு உயிரிழந்தார். ராஜேந்திரனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ