மேலும் செய்திகள்
மாவட்டத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
09-Mar-2025
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் மோகன்பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜென்கிங்ஸ் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.* பூசாரிப்பட்டியில் உள்ள பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி சார்பில், சர்வதசே மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். மலேசியா, தாய்லாந்து மற்றும் சர்வதேச நாடுகளில் மூத்தோர் பிரிவில் தடகள போட்டிகளில் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற உடுமலையை சேர்ந்த ராதாமணிக்கு பாராட்டு தெரிவித்து பட்டம் வழங்கப்பட்டது. முதன்மை நிர்வாக அதிகாரி தனபாலகிருஷ்ணன், தாளாளர் ஷிவானி கிருத்திகா பேசினர்.* குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், மகளிர் தினம் விழாவையொட்டி, அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, விளையாட்டு, பாட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பி.டி.ஓ., க்கள் பாலசுப்ரமணியம், பரத்கண்ணன், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய அலுவலக உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.* உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.உடுமலை ஜி.வி.ஜி கலையரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியர் மணிமொழி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார்.ஆலோசகர் மஞ்சுளா, கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி முன்னிலை வகித்தனர். சென்னை பிசிகேஜி பள்ளி தலைமையாசிரியர் மாலதி, 'உழைப்பின் இன்றியமையாமை குறித்தும், மன உணர்வுகளை கட்டுபாட்டில் வைப்பது குறித்தும்' மாணவியருக்கு விளக்கி பேசினார்.மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கல்லுாரி மகளிர் மைய உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி தெரிவித்தார். விழாவில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.* உலக மகளிர் தின விழாவையொட்டி வால்பாறை நகராட்சி, பள்ளி, கல்லுாரிகளில் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.வால்பாறை நகரில் உள்ள அஞ்சலகத்தில், போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி தலைமையில், ஊழியர்கள் அலுவலகத்தில் கேக் வெட்டி, மகளிர் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர்.வால்பாறை காருண்யா சமூக சேவை மையத்தில் மகளிர் தின விழா இயக்குனர் அனிலாமேத்யூ தலைமையில் நடந்தது. விழாவில் நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, பாரி ஆக்ரோ டீ எஸ்டேட் துணை மேலாளர் அம்மு, ஜெயஸ்ரீ டீ எஸ்டேட் மருத்துவமனை டாக்டர் கீர்த்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.* பி.ஏ., கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக மகளிர் தின விழா, அக்கல்லுாரி அரங்கில் நடந்தது. பி.ஏ., கல்வி நிறுவனங்கள் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் தனமணி, பெண்களால் மேம்படும் சமுதாயம் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி ஆசிரியர் சுதா, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இணை இயக்குனர் சூரியபிரபா, இயக்குனர் காயத்ரி, சக்திபிரியதர்ஷினி ஆகியோருக்கு சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது. பி.ஏ., கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அலுவலர் மணிகண்டன், பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு விழா, மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. யுவசக்தி மகளிர் நலச் சங்கத் தலைவர் ஞானாம்பிகை, ஆண்டறிக்கை வாசித்தார்.தொடர்ந்து, கோவை ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, சென்னை ரானே மெட்ராஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கவுரி ஆகியோருக்கு யுவசக்தி விருது விழங்கப்பட்டது.மேலும், யுவசக்தி மகளிர் நலச் சங்கம் வாயிலாக திரட்டப்பட்ட நிதி வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. தவிர, ஐந்து மாணவியருக்கு சிறந்த முதன்மையான மாணவர் விருதும் வழங்கப்பட்டது.சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவன தலைவர் மாணிக்கம், தாளாளர் ஹரிஹரசுதன், செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சுப்பிரமணியன், எம்.சி.இ.டி., முதல்வர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரியில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் சுமதி, தலைமை வகித்தார். முன்னதாக, ஆங்கிலத்துறை தலைவர் செந்தில்நாயகி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை பொறுப்பாளர் ராஜேஸ்வரி கலந்து கொண்டார். தொடர்ந்து, மாணவியர் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறைத்தலைவர் புஷ்பலதா நன்றி கூறினார்.ஆனைமலை போலீசார் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி, நீண்ட துார ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. ஓட்டப் போட்டியில், வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியை, டி.எஸ்.பி., ஸ்ரீநிதி துவக்கி வைத்தார்.திவான்சாபுதுார் பஸ் ஸ்டாப்பில் துவங்கிய ஓட்டம், 2.5 கி.மீ., துாரம், ஆர்.டி.ஓ., சோதனைச் சாவடி வரை நீண்டது. முடிவில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான உதவி எண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான மொபைல் ஆப் குறித்து விளக்கப்பட்டது. - நிருபர் குழு -
09-Mar-2025