உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

பாலங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

வால்பாறை:பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.மேற்கு மலைத்தொடர்ச்சியில்அமைந்துள்ள உள்ள வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.கடந்த மாதம் பெய்த கனமழையால் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், தடுப்புச்சுவர் இடிந்தும், மண் சரிவும் ஏற்பட்டது.மழை பாதிப்புக்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கண்டறிந்து, மீட்பு பணிகளை மேற்கொண்டதால், வால்பாறையில் மலைப்பாதை ரோட்டில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில்,பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், வால்பாறை உட்கோட்டம் சார்ந்த ரோடுகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் நீர்வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான பாலங்கள் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளது. மேற்படி பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ