உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

வடவள்ளி : கணுவாய், வி.எம்.டி., நகரை சேர்ந்தவர் லலித்,37; கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, லலித், வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். மனைவி மற்றும் உறவினர்கள், லலித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை