உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளி கொலை; தப்பிக்க முயன்றவரின் கால் முறிந்தது

தொழிலாளி கொலை; தப்பிக்க முயன்றவரின் கால் முறிந்தது

கோவில்பாளையம், : கோவில்பாளையம் அருகே, சக ஊழியரை கொலை செய்தவரை போலீசார் கால் முறிவுடன் பிடித்தனர்.சரவணம்பட்டி அருகே கீரணத்தம், குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ராமன், 35. தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தையா மகன் சங்கர், 22. இவர்கள் இருவரும் வழியாம் பாளையம் பிரிவில் உள்ள மணிகண்டன் என்பவர் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர்.கடந்த வாரம் ராமன் தான் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மார்பு மற்றும் வயிற்றில் கத்தி குத்து இருந்தது. உடன் தங்கியிருந்த சங்கரை காணவில்லை. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சங்கரை தேடி வந்தனர். நேற்று சங்கர் கரட்டு மேடு பகுதியில் பிடிபட்டார். அவர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் அணிந்திருந்த ரத்த கறையுடன் கூடிய துணிகளை கவுசிகா நதி அருகே அய்யனார் கோவிலில் மறைத்திருப்பதாக கூறினார்.போலீசார் தடயங்களை எடுக்க சென்றபோது தப்பிக்க முயன்ற சங்கர் கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ