உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக அமைதி தினவிழா  வேதாத்திரிய கருத்தரங்கம் 

உலக அமைதி தினவிழா  வேதாத்திரிய கருத்தரங்கம் 

கோவை;கோவை மண்டல உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் மாநகர மனவளக்கலை அறக்கட்டளைகள் ஒருங்கிணைந்து வேதாத்திரிய கருத்தரங்கு, நேற்று ஆர்.எஸ்.புரம் சிந்துசதன் அரங்கில் நடத்தப்பட்டது.ஆண்டுதோறும், வேதாத்திரி மகரிஷியின் பிறந்த தினம், உலக அமைதி நாளாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில், உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர் அருள்நிதி செல்வராஜ் தலைமையில் நிகழ்ச்சிகள் நடந்தன. கோவை அறக்கட்டளையின் துணைத்தலைவர் சுப்பிரமணியன், பேச்சாளர்கள் நாகராஜன், சமத்துவராணி, முருகேசன், அருணா ஆகியோர் அமைதியோடு வாழ்வதற்கான வழிமுறைகள், பரபரப்பான உலகில் அமைதியான மனநிலையுடன் செயல்பட, தேவையான மனவளக்கலை குறித்து பேசினர். நிகழ்வில், கோவை பீளமேடு அறக்கட்டளையின் செயலாளர் தேவிலட்சுமி, பொதுமக்கள், கல்லுாரி, பள்ளி மாணவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ