உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒய்.எம்.சி.ஏ., ஓபன் செஸ் போட்டி 137 வீரர், வீராங்கனைகள் அசத்தல்

ஒய்.எம்.சி.ஏ., ஓபன் செஸ் போட்டி 137 வீரர், வீராங்கனைகள் அசத்தல்

கோவை, : ஒய்.எம்.சி.ஏ., சார்பில் நடந்த மாவட்ட அளவிலான, 'ஓபன் செஸ்' போட்டியில், 137 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.ஒய்.எம்.சி.ஏ., நிறுவனம் கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை தொடர்ந்து முதல் முறையாக மாவட்ட அளவிலான'ஓபன் செஸ்' போட்டியை, நேற்று முன்தினம் நடத்தியது. ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நடந்த இப்போட்டியில் சிறியவர், பெரியவர்களுக்கு தனித்தனியே போட்டிகள் இடம்பெற்றன.கோவை மாவட்ட செஸ் சங்கம் (சி.டி.சி. ஏ.,) இணைந்து நடத்திய செஸ் போட்டியில், அனைத்து வயதினரையும் சேர்த்து, 137 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.முதல், 15 இடங்களை பிடித்தவர்களுக்கு, ரொக்க பரிசாக ரூ. 15 ஆயிரம் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில், 50 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனியாக சிறப்பு பரிசும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு, ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டுத் துறை தலைவர் எபினேசர் டேவிட், சி.டி.சி.ஏ., செயலாளர் தனசேகர் மற்றும் பொருளாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை