உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும்: அண்ணாமலை

யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும்: அண்ணாமலை

தொண்டாமுத்துார்:சர்வதேச யோகா தினமான நேற்று, ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை யோகாசன பயிற்சி மேற்கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி:கள்ளக்குறிச்சி சம்பவம் என்னை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது. சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தார் சிலரிடம், ஈம காரியம் செய்வதற்கு கூட பணம் இல்லை. அந்த குடும்பம், கஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்காக பா.ஜ., சார்பில், 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தேன். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை. டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும். அதற்கு மாற்றாக, கள்ளுக்கடை திறக்க வேண்டும். ஆனால், அதை அரசு கண்காணிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தன்னை சுய பரிசோதனை செய்து, கள்ளச்சாராய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு, யோகா ஆசிரியர்களை நியமித்து, பள்ளிக்கல்வித் துறையில், யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும். மது அருந்திவிட்டு சாலையில் தர்ணா செய்வது, காரை நடுரோட்டில் நிறுத்துவது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம், மது, கஞ்சாவுக்கு அடிமையாவதே. இதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர, அரசே யோகா மையங்களை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை