10 அடி நீள ராஜநாகம் வனத்துறையினர் மீட்பு
வால்பாறை,; அதிரப்பள்ளி அருகே குடிநீர் குழாயில் இருந்த ராஜநாகத்தை, கேரள வனத்துறையினர் மீட்டனர்.வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. நீர்வீழ்ச்சி அருகே குடிநீர் குழாயில், 10 அடி நீளமுள்ள ராஜநாகம் இருப்பதை கண்ட தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு சென்ற, கேரள வனத்துறையினர் குடிநீர் குழாய் அருகே படம் எடுத்து ஆடிய ராஜநாகத்தை, லாவகமாக பிடித்து, அதிரப்பள்ளியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இதனால், உள்ளூர் மக்களும், தொழிலாளர்களும் நிம்மதியடைந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'அதிரப்பள்ளியில் தற்போது வெயில் நிலவுவதால், பாம்புகள் வனப்பகுதியை விட்டு வெளியில் வரத்துவங்கியுள்ளன. பொதுமக்களும், வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியரும் கவனமாக செல்ல வேண்டும். தேவையில்லாமல் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.