உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த, ஐந்து பேரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கிழக்கு போலீஸ் எஸ்.ஐ., கவுதமன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த, பொள்ளாச்சி முகமது ரியாஸ், 43, ஜாபர் அலி, 40, சிவக்குமார், 34, ரமேஷ்குமார், 44, மற்றும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை கண்ணப்பன், 40, ஆகியோரை கைது செய்த போலீசார், 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ