வயநாட்டுக்கு 10 லட்சம் நிதி
கோவை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.இத்தகவலை, கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் பலராமன் தெரிவித்துள்ளார்.