100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
கோவை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒத்தக்கால் மண்டபம் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி சார்பில், பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் சாரண இயக்கத்தினர், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளுடன், 100 சதவீத ஓட்டு என்ற வடிவமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி முதல்வர் ஜெயா மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.