உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறிமுதல் செய்யப்பட்ட 1,025 கிலோ கஞ்சா அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 1,025 கிலோ கஞ்சா அழிப்பு

கோவை: பறிமுதல் செய்யப்பட்ட, 1,025 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், நேற்று அழிக்கப்பட்டன. போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ரயில்கள் வாயிலாக வடமாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடந்த ஓராண்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவைக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில், 1,025 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அழிக்கும் பணிகள் நேற்று நடந்தன. கோவை வெள்ளலுாரில் உள்ள, போதைப் பொருட்கள் அழிப்பு மையத்தில் இவை அழிக்கப்பட்டன. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், துணை கமிஷனர்(தெற்கு) கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை