உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகம்மன் கோவிலில் 10ம் ஆண்டு விழா

நாகம்மன் கோவிலில் 10ம் ஆண்டு விழா

நெகமம்; நெகமம், செட்டியக்காபாளையம் விநாயகர், நாகம்மன், கன்னிமார் கருப்பராயன் கோவிலில், 10ம் ஆண்டு விழா, நேற்றுமுன்தினம் துவங்கியது. சுவாமிக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். காப்பு கட்டுதல், விநாயகர் பூஜை மற்றும் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல், உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடந்தது. நேற்று, கணபதி ஹோமம், கலசம் முத்தரித்தல், கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், செட்டியக்காபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி