உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு நாளை துவக்கம்

பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு நாளை துவக்கம்

கோவை : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு, நாளை துவங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.கோவை மாவட்டத்தில், அரையாண்டு விடுமுறைக்கு பின், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை, பாடவாரியாக யூனிட் தேர்வு நடத்தப்பட்டது.இதற்கான வினாத்தாள், அந்தந்த பள்ளி இ-மெயில் முகவரிக்கு அனுப்பி, நகலெடுத்து தேர்வு நடத்தி, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எமிஸ் இணைதளத்தில் பதிவேற்ற உத்தர விடப்பட்டது.பாடங்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து தேர்வு நடத்தினால், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, பாடத்திட்ட சுமை இருக்காது என்பதால், யூனிட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொங்கல் விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், நாளை (ஜன., 19ம் தேதி) பத்தாம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 29ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான வினாத்தாள், உரிய வினாத்தாள் காப்பு மையங்களில், தேர்வு நாளன்று காலையில் பெற்று கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை முன்னிட்டு, நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், அடுத்தவாரம் தைபூசத்திற்காக 25ம் தேதியும், குடியரசு தினத்தன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.இதனால், சனிக்கிழமைகளில் இனி சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை