உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: கோவை வந்த சபரி எக்ஸ் பிரஸ் ரயிலில், சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மூட்டையை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (17230) நேற்று காலை 8:00 மணிக்கு, கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அந்த ரயிலில் ஜி.எஸ்., பெட்டி கழிப்பறை அருகில், வெள்ளை நிற மூட்டை ஒன்று இருந்தது. அந்த மூட்டைக்கு உரியவர் யாரும் அங்கில்லை.சந்தேகப்பட்ட ரயில்வே போலீசார், மூட்டையை சோதனை செய்தபோது, அதில், 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.இதன் மதிப்பு ரூ. 6 லட்சம். கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என, தெரியவில்லை. ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை