உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி அடிவாரத்தில் 128மி.மீ., மழை

சிறுவாணி அடிவாரத்தில் 128மி.மீ., மழை

கேரளாவில், வழக்கத்தை விட முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் காரணமாக, கேரளாவை ஒட்டி உள்ள கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த நான்கு நாட்களாக, தொடர் கன மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் முதல் மேற்கு தொடர்ச்சி மலையில், மழையின் தாக்கம் அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை 8:00 முதல் நேற்று காலை 8:00 மணி வரை, சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில், 120 மி.மீ., மழையும், சிறுவாணி அடிவாரப் பகுதிகளில், 128 மி.மீ., மழையும் பதிவானது. இதனால், நொய்யல் ஆற்றில் இரண்டாம் நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு, 950 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை