உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்சயா பொறியியல் கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா

அக்சயா பொறியியல் கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா

கோவை; கிணத்துக்கடவில் அமைந்துள்ள அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரியின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.பொள்ளாச்சி வி.வி.டி.என்.,டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் செல்வமுத்துக்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''லட்சியத்தை வகுப்பதேவெற்றிக்கான முதல் அடிப்படை. சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். ''தங்கள் துறைக்கான திறன்களை, ஆழமாக கற்றுக்கொள்வது தொழில்துறைவளர்ச்சிக்கு சிறந்த முதலீடு,'' என்றார்.கல்லுாரியின் செயலாளர் பவித்ரன், ஆலோசகர் ஜோசப் சேவியர், தலைமை நிர்வாக அதிகாரி சுபிலன், முதல்வர் ரவீந்திரன் மற்றும் துணை முதல்வர் சிவசங்கரி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை