மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 7,810 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
22-Oct-2024
கோவை ; கோவை மாவட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மூலமாக, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் பயணிகள், தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கின்றனர்.தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களுக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோவை மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காந்திபுரம், சிங்காநல்லுார், சூலுார், உக்கடம், சாயிபாபா காலனி மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்டுகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம், 2,495 பஸ்கள் ஓடின.அக்., 28 முதல், 31 வரை நான்கு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயங்கின. இவற்றின் மூலம் கோவை மாவட்டத்தில் இருந்து, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கின்றனர். இக்கணக்கீடு, அரசு பஸ்களில் பயணித்தவர்கள் மட்டுமே. ஆம்னி பஸ்களில் சென்னை மற்றும் வெளியூர்களுக்கு சென்றவர்கள் மற்றும் ரயில்கள், விமானங்கள் வாயிலாக சென்றிருப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரத்தை தாண்டும்.பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலை நேரத்தில், கோவை நோக்கி திரும்பி வருவதற்கு வாய்ப்புள்ளது. அவ்விரு நாட்களும் பயணிகள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டிருக்கிறது.
22-Oct-2024