உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவா பாரதி இலவச ஆயுர்வேத முகாமில் 147 பெண்கள் பயன்

சேவா பாரதி இலவச ஆயுர்வேத முகாமில் 147 பெண்கள் பயன்

கோவை : சேவா பாரதி சார்பில் நேற்று நடந்த பெண்களுக்கான, இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாமில், 147 பேர் பயனடைந்தனர்.லோக மாதா அஹில்யாபாய் ஹோல்கர், 300வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெண்களுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம், ஆர்.எஸ்.புரம், சத்குரு சேவாஸ்ரமத்தில் நேற்று நடந்தது.காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடந்த முகாமில், ரத்தசோகை, முறையற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக, 147 பேர் ஆலோசனை பெற்றனர்.ஏ.வி.பி., ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்களின், உரிய ஆலோசனைகளுக்கு பிறகு, 10 நாட்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.பத்து நாட்களுக்கு பிறகு, மீண்டும் பரிசோதனை செய்து தொடர் சிகிச்சைகள் வழங்கப்படும் என, சேவா பாரதி மாநில கவுரவ தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை