உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனைக்காக வைத்திருந்த 1,547 மதுபாட்டில்கள் பறிமுதல்

விற்பனைக்காக வைத்திருந்த 1,547 மதுபாட்டில்கள் பறிமுதல்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சில்லிங் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த, 1,547 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியையொட்டி,சில்லிங் விற்பனை நடைபெறுகிறதா என, ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அதில், பொள்ளாச்சி லிங்கையன் வீதியில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து, 1,451 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் குடியிருந்த சிவகங்கையை சேர்ந்த அருண்,29 என்பவர், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.அதே போன்று, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட வஞ்சியாபுரம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட, லுாயிஸ் என்பவரிடம் இருந்து, 18 மதுபாட்டில்கள்; சிவபாலன் என்பவரிடம் இருந்து, 55 மதுபாட்டில்களையும்; ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே விக்னேஷிடம் இருந்து, 23 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை