உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டியிருந்த வீட்டில் 16 சவரன் நகை திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் 16 சவரன் நகை திருட்டு

ஆனைமலை; ஆனைமலை சோமந்துறை சித்துாரைச்சேர்ந்த தொழிலாளி சக்திவேல்,49. இவர், மனைவி பொள்ளாச்சியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவர்கள், வழக்கம் போல வீட்டை பூட்டி சாவியை வீட்டுக்கு வெளியே உள்ள டப்பாவில் வைத்து விட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டுக்கு வந்து, பீரோவில் உள்ள பணத்தை எடுக்க திறந்த போது, அதில், இருந்த, 16 சவரன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'வீட்டின் சாவியை டப்பாவில் வைத்து செல்வதை கண்காணித்து, யாரும் இல்லாத போது, சாவியை எடுத்து நகையை திருடியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரிக்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை