மேலும் செய்திகள்
போக்குவரத்து இடையூறு: வாகனங்கள் பறிமுதல்
24-Sep-2026
போத்தனூர்: போத்தனுாரிலிருந்து வெள்ளலூர் செல்லும் ரோட்டில் ஜி.டி. டேங்க் பஸ் ஸ்டாப் உள்ளது. இதனருகே விநாயகர் சதுர்த்திக்கு அப்பகுதியினர் சார்பில், விஷ்ணுகுமார் பொறுப்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி நிபந்தனைக்கு மாறாக வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். அதிக சத்தத்தில் ஒலிபெருக்கி வைத்தும், இசை கருவிகளையும் இயக்கினார்கள். புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஹனுமன் சேனா சார்பில், ரவிகுமார் என்பவர் அனுமதி பெறாமல் விநாயகர் சிலை வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.
24-Sep-2026