2 நாட்கள் தட்டச்சு தேர்வு; 52 மாணவர்கள் பங்கேற்பு
வால்பாறை; வால்பாறையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில், 52 மாணவர்கள் பங்கேற்றனர். வால்பாறையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தட்டச்சு தேர்வு கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இத்தேர்வு வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர் சிவன்ராஜ் (வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி) துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் (பெள்ளாச்சி நாச்சிமுத்துபாலிடெக்னிக்) ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடந்தது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 52 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.