ரயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா
கோவை; நேற்று மதியம் கோவை மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியின் போது, மூட்டை ஒன்று கிடப்பதை பார்த்தனர். சோதனையில் அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. போலீசார் நிற்பதை பார்த்த கஞ்சா கடத்தி வந்த நபர் கஞ்சா மூட்டையை, வழியில் போட்டுவிட்டு தலைமறைவானது தெரிந்தது. மூட்டையை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.