உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவ முகாமில் 20 பேர் ரத்த தானம்

அரசு மருத்துவ முகாமில் 20 பேர் ரத்த தானம்

அன்னுார்; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, பொகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், ரத்ததான முகாம் அன்னுார் சரவணா ஹாலில் நேற்று நடந்தது.முகாமை துவக்கி வைத்த, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ராம் தீபிகா பேசுகையில், ''தகுதியுள்ள அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் ரத்தம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ரத்ததானம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம், என்றார்.முகாமில், ரோட்டரி சங்க உறுப்பினர்கள்உள்பட 20 பேர் ரத்த தானம் செய்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், அன்னுார் டவுன் ரோட்டரி சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ