உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆனைமலை; ஆனைமலையில், 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆனைமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்துறை, போலீசார் இணைந்து, சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டில் பூட்டிய அறையில் பதுக்கி வைத்திருந்த, 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தலைமறைவாக உள்ள, ஆனைமலையை சேர்ந்த அப்துல்கலாம் ஆசாத்,43, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ