கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்த 21 தனியார் பஸ்கள்
கோவை: தனியார் பஸ்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்(ஆர்.டி.ஓ.) பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஆர்.டி.ஓ.,கள் தலைமையிலான குழுவினர் இரு நாட்கள் சோதனை நடத்தினர். கோவை தெற்கு அலுவலகத்துக்கு உட்பட்ட எல்லையில் 3, வடக்கில் 2, மத்திய அலுவலகத்தில் 8, மேற்கில் 6 மற்றும் மேட்டுப்பாளையத்தில் 2 என, 21 தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. விதிமீறல் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு, ஆர்.டி.ஓ.,கள் பரிந்துரை செய்துள்ளனர்.