வீட்டு பூட்டை உடைத்து 22 பவுன் கொள்ளை
கோவை; துடியலூர், தொப்பம்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விக்னேஷ் சந்திரன், 35. இவர் கடந்த 16 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குன்னுாருக்கு குடும்பத்துடன் சென்றார். மறுநாள் இரவு, 7:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு, உடைக்கப்பட்டிருந்தது. தரைத்தளத்தில் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த, தங்க வளையல்கள், செயின்கள், பிரேஸ்லெட், கம்மல் என, 22 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தன. விக்னேஷ் சந்திரன் அளித்த புகாரின் பேரில், துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.