மேலும் செய்திகள்
இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு
08-Jul-2025
மேட்டுப்பாளையம், ஜூலை 27--மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழர் ஜோடிகளின் திருமணம் பதிவு செய்யப்பட்டது. மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்த, தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. மேட்டுப்பாளையம் வேடர் காலனி மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களான, 22 ஜோடிகளின் திருமணம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் ராமமூர்த்தி தலைமையில் நேற்று பதிவு செய்யப்பட்டது. மறுவாழ்வு முகாமில் இருந்து சார் பதிவாளர் அலுவலகம் வரை, இந்த ஜோடிகளை அழைத்து வருவதற்கான வாகன வசதி, சாப்பாடு உள்ளிட்ட இதர வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
08-Jul-2025