உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரியில் 22வது பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் கல்லுாரியில் 22வது பட்டமளிப்பு விழா

கோவை: கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், 22வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. நாசா விண்வெளி விஞ்ஞானி நாச்சிமுத்து கோபால்சாமி, பட்டங்களை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:எதிர்காலத்தில் கல்வி என்பது அறிவியல் சார்ந்தும், ஆக்கபூர்வமாகவும், சமூகத்திற்கு நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும். கல்லுாரி வாழ்வு வேறு; சமூக வாழ்வு வேறு. அனைவரும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மூளை அதிகபடியாக வேலை செய்யும். படித்துக் கொண்டே இருக்கும் போதுதான், சிந்தனை விரிவடையும்.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லூரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ