உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச மனநல ஆதரவு எண்ணில் 24 மணி நேர ஆலோசனை

இலவச மனநல ஆதரவு எண்ணில் 24 மணி நேர ஆலோசனை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் சர்வதேச தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். முகாமில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் மற்றும் சமுதாய குழு உறுப்பினர்கள், மனநலம், மன சுத்தம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர். நிகழ்ச்சியில், டெலிமனஸ் திட்டம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், இந்திய அரசின் ஒரு முன்முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகிறது. டெலிமனஸ் சார்பில் இலவச மனநல ஆதரவு எண் 14416 என்ற எண்ணில், 24 மணி நேரமும் ஆலோசனை பெறலாம். ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், ஆரம்ப கட்ட ஆலோசனைக்கு பிறகு தேவைப்பட்டால் சிறப்பு நிபுணர்களுடன் வீடியோ அழைப்புகளுடன் விரிவான ஆலோசனை வழங்கப்படுகிறது. மன அழுத்தம் மேலாண்மை யுத்திகள், ஆரம்பகால அறிகுறிகள், அடையாளம் காணும் கருவிகள் ஆகியவற்றை கொண்டு டெலிமனஸ் செயலி இயங்குகிறது என, விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ரோட்டரி சமுதாய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை