பயன்பாட்டுக்கு வந்த 25 தெரு விளக்குகள்
கோவை : மாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்ட சிவலிங்கபுரம் பிரதான சாலையில் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட, 25 தெரு விளக்குகள் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள, மாநகராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நட்டுவைத்த மேயர் ரங்கநாயகி, அவற்றை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார். உதவி கமிஷனர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.