உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காவலர் தினத்தில் 25 யூனிட் ரத்த தானம்

காவலர் தினத்தில் 25 யூனிட் ரத்த தானம்

சூலுார்; தமிழக காவலர் தினத்தை ஒட்டி நடந்த மருத்துவ முகாமில்,போலீசார் மற்றும் பொதுமக்கள், 25 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். தமிழக காவலர் தினம், ஆண்டு தோறும், செப். 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சூலுார் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கே.எம்.சி.எச்., மருத்துவமனை, சுவாமி விவேகானந்தர் பிளட் சென்டர் சார்பில், மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்தது. கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் முகாமை துவக்கி வைத்தார். போலீசார், பொதுமக்களுக்கு, டாக்டர்கள் தலைமையில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வராகவன், எஸ்.ஐ., அருள்பிரகாஷ் மற்றும் போலீசார், 25 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். ரத்தத்தை தானமாக கொடுத்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை