உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 250 தீயணைப்பு வீரர்கள் தயார்

250 தீயணைப்பு வீரர்கள் தயார்

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 250 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிப்பதால் தீவிபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை முன்னிட்டு தீயணைப்பு துறையினர், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ''பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. விபத்து நேரிட்டால் சந்திக்க மாநகரில், 250 தீயணைப்பு வீரர்கள், தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ