உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருட்கள் விற்ற, பயன்படுத்திய 264 பேர் கைது; 168 கிலோ கஞ்சா பறிமுதல்

போதைப்பொருட்கள் விற்ற, பயன்படுத்திய 264 பேர் கைது; 168 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை, : கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஜூன்., 15ம் தேதி போதைப்பொருட்கள் விற்ற மற்றும் பயன்படுத்திய 264 பேரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாநகரில் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜன., 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை, மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக, 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் தொடர்புடைய 264 பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து மாதங்களில் 168 கிலோ கஞ்சா, 11 ஆயிரம் போதை மாத்திரைகள், 504 கிராம் மெத்தபெட்டமைன், 92 கிராம் கொக்கையின், 48 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தவிர, போதைப்பொருட்கள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 32 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒன்பது நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ. 28 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 29 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. தேனி போன்ற மாவட்டங்களுக்கு சென்று கல்லுாரி மாணவர்கள் போல் வாங்கி வருகின்றனர். அவர்களையும் கண்காணித்து கைது செய்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ